June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

போர் சூழலுக்கு மத்தியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷியா

1 min read

Russia offers to supply crude oil to India amid war

4.3.2026
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க

படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எண்ணெய் தேவையில் சுமார் 50 சதவிதம் இந்தப் பாதை வழியாகவே வருகிறது. தற்போது இந்தியாவிடம் 50 நாட்களுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.

பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் இருப்பையும் சேர்த்தால், சுமார் 74 நாட்கள் வரை சமாளிக்க முடியும், குறுகிய காலத்தில் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்தார். விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, நாட்டில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.
இந்நிலையில் இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க தயார் என ரஷியா அறிவித்துள்ளது.

தற்போது சுமார் 1 கோடி பேரல் ரஷிய கச்சா எண்ணெய் கப்பல்களில் தயார் நிலையில் உள்ளது. இதை இந்தியா உடனடியாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் அழுத்தத்தாலும் அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ரஷியாவிடமிருந்து இறக்குமதி 20 சதவீதத்துக்கும் கீழாகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவும் சூழலில், இந்த முடிவை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *