அம்பை பகுதியில் அய்யா வைகுண்ட சுவாமியின் 194-வது அவதார விழா
1 min read
194th incarnation festival of Ayyavaikunda Swamy in Ambai area
5.3.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அய்யா வைகுண்ட சுவாமியின் வாகனத்தை பக்தர்கள் தோளில் சுமந்த படி நடந்த 16-வது ஆண்டு மாசி மக ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நாராயண சுவாமி கோவில்களில்
மாசி மாதம் 20 ம் நாள் அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பூவன்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், அயன்சிங்கம்பட்டி, அடைச்சாணி, பேட்டை, சிவந்திபுரம் போன்ற பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அய்யா நாராயண சுவாமியின் வாகனங்கள் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் முன்புள்ள திடலில் ஒன்று கூடி அங்கிருந்து மாசி மகா ஊர்வலமாக வாகைக்குளம் (வகைபதி) நோக்கி புறப்பட்ட சுவாமி வாகனங்கள் ,
சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை அய்யா சிவசிவ அரகரா.. அரகரா… என்ற அய்யாவின் திருநாமம் கோஷங்கள் முழங்க சிறுமியர்களின் கோலாட்டம், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பக்த கோடிகள் நடந்து சென்றனர்.
மாசி அவதார ஊர்வலமானது வாகைபதி வந்தடைந்ததும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த சப்ரபவணி வாகைபதியில் ஆரம்பித்து 16 வது ஆண்டாக நடைபெற்று வருகிறது