June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாடு அரசின் தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

1 min read

Applications are invited for the Tamil Nadu Government Industrial Relations Award Chennai

9.3.2026
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை வாயிலாக வழங்கப்படவுள்ள தொழில் நல்லுறவு விருதுக்கான (Good Industrial Relations Award) 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றி தொழிலாளர் ஆணையர் ராமன், வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களிடையே தொழில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் “தொழில் நல்லுறவை பேணிப்பாதுகாக்கும் பணியில்“ சிறந்து விளங்கும் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு பரிசுகள் வழங்கும் வகையில் “தொழில் நல்லுறவு பரிசு திட்டம்“ என்ற திட்டத்தை 1975-ம் ஆண்டு துவங்கி நாளது தேதி வரை செயல்படுத்தி வருகிறது.

இப்பரிசு திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு கேடயம், பரிசுத்தொகை மற்றும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்க பெற்ற முத்தரப்புக்குழு பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும்.

இவ்விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் (http://www.labour.tn.gov.in/GIRA) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை, நேரடியாக அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம் மற்றும் சென்னை, 6வது அவென்யூ, அண்ணா நகர், தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்று கொள்ளலாம்.

ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், நுழைவு கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100/-ம், வேலையளிப்பவரானால் ரூ.250/-ம் “செயலாளர், (தொழிலாளர் தனி இணை ஆணையர், தொழிலாளர் ஆணையர் அலுவலகம்) தொழில் நல்லுறவு பரிசுக்குழு, அண்ணா நகர், சென்னை – 40″ (The Secretary, (Special Joint Commissioner of Labour, Office of the Commissioner of Labour) Good Industrial Relations Award Committee, Anna Nagar, Chennai -40) என்ற பெயருக்கு கணக்கு தலைப்பு (“0230-00 Labour and Employment 800 Other Receipts –227 Non Taxation fees –99 Others – AG Receipt of Labour Department (DP Code No. 0230 00 800 AG 22799)”) –ன் கீழ் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூல கிளையில் தொகை செலுத்திய அசல் செலுத்து சீட்டு (challan) வைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (அனைத்து இணைப்புகளுடன்) சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 30.04.2026-ற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அலுவலக தொலைபேசி எண். 044- 24320887.

இவ்வாறு அறிக்கை தெரிவிக்கின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *