June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நாளை மறுநாள் வரை நீட்டிப்பு

1 min read

One-day banknote offerings in Tirupati worth Rs. 3.94 crore

9.3.2026

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அவசியம். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நாடு முழுவ தும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2026-27-ம் கல்வியாண்டுக் கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பப் பதிவு 8-ந்தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். கடந்த ஓரிரு நாட்களாக விண்ணப்பம் பதிவு செய்வதில் தொழில் நுட்ப கோளாறு இருந்து வந்ததாக மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோரும் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ‘நீட்’ தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘நீட்’ தேர்வு விண்ணப்பிப்பதற்கு வருகிற 11-ந் தேதி ( புதன்கிழமை) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு 11.50 மணிக்குள் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிர் ணயிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் . மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *