சென்னையில் எல்.பி.ஜி கேஸ் நிலையங்கள் மூடல்
1 min read
LPG gas stations closed in Chennai
10.3.2026
சென்னை வடபழனியில் எல்.பி.ஜி கேஸ் நிலையங்கள் மூடப்படுவதால் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பமுடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இதனால் ஆட்டோ சேவை பாதிப்படையும் நிலை உருவாகி வருகிறது.
ஏற்கனவே உணவகங்கள் மூடி வரும் நிலையில் ஆட்டோக்கள் சேவையும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாக கேஸ் நிலையங்களுக்கும் எல்.பி.ஜி வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தை அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் வரை செயல்பட்டு வந்த கேஸ் நிலையம் இன்று கேஸ் இல்லாததன் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.