கடையம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை பரப்புரை
1 min read
AIADMK Assembly Election Manifesto Campaign in Kadayam North Union
10/3/2026
தென்காசி தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில்
கடையம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோக்கித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை கடையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.பி. நாடனூர், செல்லபிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஜி. இராஜேந்திரன் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரை மேற்கொண்டார்.
தென்காசி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி எஸ். கே. சண்முகசுந்தரம், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த பரப்புரையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் செல்வம், கிளைச் செயலாளர்கள் அருள்முத்து ராஜ், பெரியசாமி, வெங்கடாசலபதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முருககனி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சமுத்திரகனி உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.