பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய கடற்படை அதிகாரி கைது
1 min read
Indian Navy officer arrested for sharing classified information with Pakistan
11/3/2026
பாகிஸ்தான் உளவாளியாக மாறிய உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரி பிடிபட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஆதர்ஷ் குமார் என்கிற லக்கி, கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள இந்திய கடற்படை சவுத் காமாண்ட தளத்தில் பயணியாற்றி வந்தார்.
புலனாய்வாளர்களின் தகவலின்படி, இந்திய கடற்படையின் முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு வழங்கியுள்ளார்.
புகைப்படங்கள், கடற்படை தகவல்களை ஆன்லைன் மூலமாக அவர் அனுப்பியுள்ளார். மேலும் இதற்காக அவரது தனிப்பட்ட வாங்கிக்கணக்குக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதும் கண்டுடிபிக்கப்பட்டுள்ளது.
அவரின் செயல்பாடுகள் குறித்து அறிந்த உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப்படை விசாரணைக்கு பின் அவரை தேச துரோகம் மற்றும் உளவு வேலைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்துள்ளது.
அவர் பகிர்ந்த தகவல்கள் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.