June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட காங். ஊடகத்துறை தலைவர் செங்கோட்டை ராஜீவ்காந்தி

1 min read

Tenkasi District Congress Media Department President Sengottai Rajiv Gandhi

10.3.2026
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் மாவட்ட தலைவராக செங்கோட்டை எம்.காம் பட்டதாரி இளைஞர், ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம்,
செங்கோட்டை மேலுார் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. எம்.காம் பட்டதாரி இளைஞரான இவர் நகர காங்கிரஸ் கட்சியின் பல்வேறுபொறுப்புகளில் இருந்து சிறப்பான பணிகளை செய்து வந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பிலும் சிறப்பாக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவி சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய சமூக ஊடகத்துறை தலைவி சுப்ரியா ஷ்ரினேட் அனுமதியுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ., ஒப்புதலுடன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆன்டோ பொன்னையா பரிந்துரையின் பேரில் எம்.காம்., பட்டதாரியான செங்கோட்டை ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் தென்காசி மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு வந்த நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள செங்கோட்டை ராஜீவ் காந்திக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலா்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *