வாசுதேவநல்லூர்: சிறுமிக்கு தாலிகட்டி பாலியல் தொந்தரவு செய்தவருக்கு
1 min read
Vasudevanallur: Man who tied a talisman to a girl and sexually harassed her
12/3/2026
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கங்கை அம்மன் கோவில் மேல தெருவை சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றம் 10 வருடம் சிறை தண்டனை மற்றும் பதினொராயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கீழ ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் பாண்டி வயது (35) புளியங்குடியில் இன்ஜினியரிங் கல்லூரி பயின்று வரும் பொழுது, வாசுதேவநல்லூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிறுமி புளியங்குடி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருவரும் ஒன்றாக பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமி கடந்த 15.03.2019 அன்று சிறுமியை எங்கு தேடியும் காணவில்லை என்பதால் சிறுமியின் தந்தையார் பால்ராஜ் வாசுநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் . பாண்டியை விசாரித்த பொழுது புளியங்குடி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கடைசி தேர்வு முடிந்தவுடன் புளியங்குடியில் இருந்து பாண்டி சிறுமியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் சங்கரன்கோவில் சென்று வழிபோக்கில் உள்ள விநாயகர் கோயில் முன்பு தாலி கட்டி பின்பு பாண்டியின் வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக உடலுறவு செய்ததாக உள்ள குற்றம் புரிந்துள்ளார் என்பதால் போலீசார் பாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கினை விசாரித்த நீதிபதி பி. ராஜவேல் குற்றவாளி பாண்டிக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனையும் ரூபாய் 11000 கட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.