June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்

1 min read

Wickramaraja urges government to take steps to avoid shortage of cooking cylinders

12.3.2026

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணமாக கடுமையான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் தரப்பிலிருந்து பாரத பிரதமருக்கும், பெட்ரோலிய துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளோம். அதே நேரத்தில் தமிழக முதல் அமைச்சரை சந்தித்து முறையிட்டு உள்ளோம். உடனடியாக தீர்வு காணுவதாக கூறியுள்ளனர். சென்னையில் ஹோட்டல் சங்க நிர்வாகிகள், வணிகர் சங்க பேரமைப்பு சங்கங்களுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு காரணமாக உணவு பொருட்கள் வகைகள் தயாரிப்பு குறைந்துள்ளது. 40 உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 20 உணவுப் பொருட்களாக குறைக்கப் பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரம்தான் சிலிண்டர் பயன்பாடு இருக்கும்.விறகடுப்பு, விறகு கரிகள் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப் படுகிறது. உணவகங்களில் அரிசி சாதம், இட்லி உணவுகள் கிடைக்கும். தோசை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது. உணவகங்கள் விடுமுறை என்ற செயல்பாட்டை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு…
“தற்போது வணிக சிலிண்டர்கள் புக்கிங் செய்வதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, வீடுகளுக்கு சமையல் சிலிண்டர் ஆர்டர் செய்தாலே போன் வேலை செய்யவில்லை என கூறுகின்றனர். அரசாங்கத்தை குற்றம் கூறவில்லை, போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும்,வணிக பயன்பாடு சிலிண்டர் உயர்வால் டீ, காபி உள்ளிட்டவை ஏற்கனவே விலை உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் உயர்த்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கிலோவிற்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கட்டாயம் விலைவாசி உயரும்.வணிகர்கள் அதிக அளவில் வரி கட்டுகின்றனர். தற்போது ஒரு லட்சம் கோடியில் இருந்து 2 லட்சம் கோடி வரை வணிகர்கள் வரி கட்டி வருகின்றனர். அதேபோல் மக்கள் வீடுகளில் வெரைட்டி உணவுகளை தயார் செய்து சிலிண்டர்களை வீணாக்காமல் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் தயார் செய்ய பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும். ரமலான் நோன்பு, கோயில் அன்னதானங்களில் விறகு அடுப்புகளில் உணவுகளை தயார் செய்ய தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அதுசமயம்,
மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூ, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட தலைவர் எஸ். ஜீவானந்தம்,துணை தலைவர் ராசி.என்.போஸ், பொருளாளர் ஜெயம் அந்துவான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

-குணாளன், பரமக்குடி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *