ரூ.1.15 கோடி செலவில் குற்றாலம் சித்திரசபை மேற்கூரையில் புதிய செப்பு தகடு
1 min read
New copper plate on the roof of the Courtallam Chitira Sabha at a cost of Rs. 1.15 crore
14.3.2026
சிவபெருமான் நடனமாடி சிறப்பு பெற்ற தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐந்து முக்கிய திருத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் அமைந்துள்ளது சித்திர சபை.
இந்த சித்திர சபையில் ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் கருவறையின் மேல் புதிய செப்புதகடு மேற்கூரை அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் நடை பெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக் குற்றாலநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள சித்திரை சபையில் 2013 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் கும்பாபிஷேக பணிகள் மேற் கொள்வதற்காக 2025 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சித்திரை சபையின் கருவறையில் மேல் செப்பு தகடினால் புதிய மேற்கூரை மற்றும் தெப்பக் குளம் நீராழி மண்டப கோபுரம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த உபயதாரர் அறன் பணி அறக்கட்டளை தியாகராஜன் ஏற்பாட்டில் ரூபாய் 1.15 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதற்கான பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. பூஜைகளை
கணேச பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். இந் நிகழ்ச்சியில் குற்றாலநாதர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், அறன் பணி அறக்கட்டளை நிறுவனர் தியாகராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜன், ஓய்வு பெற்ற ஆட்சியர் ராஜேந்திரன்,
சந்திர பிரபா, வெங்கடேசன், முத்துக்குமார், ரேவதி, மகேஷ், கணேசன், குமணன், கவுன்சிலர்கள் நாகராஜ், மாரிமுத்து, அருண் இலஞ்சி மாரியப்பன் நடராஜன்ஆசாரி, சக்தி முத்துராஜ் இந்து ஆலய பாதுகாப்பு சிவ பாலன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.