பரமக்குடி: தாயார் உடலை தானம் செய்த மகன்கள்
1 min read
Sons who donated their mother’s body
14/3/2026
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள க. கருங்குளம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதியினர் விவசாயி மு.சிறுவன் – ராமாயி. இவர்களுக்கு கருப்பையா, சண்முகம்,அக்பர்ஷா, பசுமலை ஆகிய 4 மகன்களும், முனியம்மாள் என்ற ஒரு மகளும் உள்ளனர்.மகன் பசுமலை பரமக்குடியில் வழக்கறிஞராக உள்ளார்.
இவர்களது தாயார் ராமாயி கடந்த 10 ம்தேதி பிற்பகல் வயது முதிர்வின் காரணமாக அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது உடலை உடல்தானம் செய்ய அவரது மகன்கள்,மகள் ஆகியோர் பேசி முடிவு செய்து, ராமநாபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் உடலை ஒப்படைத்தனர். இச்செயலுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவ பேராசிரியர்கள்,மருத்துவ மாணவர்கள் பாராட்டியதுடன், சான்றிதழ் வழங்கினர்.
இதுகுறித்து மகன் வழக்கறிஞர் பசுமலை கூறியதாவது: தாயார் இறந்த பின் குடும்பத்தினர், உறவினர்கள் பேசி தாயார் உடலை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க முடிவெ டுத்தோம்.இச்செயலை விரும்பும் பலர், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் உள்ளனர்.தானம் செய்ய விரும்புவோரின் வீட்டிற்கே மருத்துவமனை நிர்வாகம் வந்து உடலை பெற்றுச்செல்லும்.
இதனால் பொருள் செலவு மிச்சமாகும். மருத்துவ ஆய்வுகளுக்காக உடல்கள் அடுத்தடுத்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.