June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ராஜஸ்தா: வரதட்சணை பட்டியலில் கியாஸ் சிலிண்டர்

1 min read

Rajasthan: Gas cylinder in dowry list

16/3/2026
மேற்காசியாவில் ஈரான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள தொடர் மோதலால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் சிக்கல் நிலவுகிறது.

தற்போது, வணிக சிலிண்டர்கள் சப்ளை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கான சிலிண்டர் சப்ளையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது. இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது, கட்டில், மெத்தை, பீரோ, டி.வி., ஏ.சி., மோட்டார் சைக்கிளுடன் இப்போது சமையல் கியாஸ் சிலிண்டரும் இணைந்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு, “வரதட்சணையாக சமையல் கியாஸ் சிலிண்டர் கேட்டு துன்புறுத்தினால், அந்தக் குடும்பத்தின் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்படும்” என எச்சரித்துள்ளது.
கடும் நடவடிக்கை

இதுகுறித்து, அம்மாநில அரசு அதிகாரிகள் கூறும்போது, “கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாயத்தால், வர தட்சணையாக சமையல் கியாஸ் சிலிண்டர்களை கேட்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வரதட்சணையாக சிலிண்டர் கேட்டு மணமகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த குடும்பத்தின் கியாஸ் இணைப்பும் துண்டிக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே விநியோகிக்கப்படும். இதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்” என்று தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *