June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்திய சற்று முன்னேற்றம்

1 min read

India slightly improves in the list of happiest countries

203.2026
சர்வதேச மகிழ்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறை, சுதந்திரம், ஊழல் ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மொத்தம் 147 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து தொடர்ந்து 9வது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது.

ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகியவை 2-ம், 3-ம் இடங்களைப் பெற்றுள்ளன. கோஸ்டாரிகா, ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து, இஸ்ரேல், லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியா 116-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 118வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 99-வது இடத்திலும், பாகிஸ்தான் 104-வது இடத்திலும், இலங்கை 134-வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 134-வது இடத்திலும் உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *