கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்வு
1 min read
Crude oil prices rise further
20.3.2026
ஈரான் வளைகுடாவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போர் தொடங்கி கடந்த 19 நாட்களில் கச்சா எண் ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 60 சதவீதம்வரை உயர்ந்தது. நேற்று முன்தினம் அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இது நேரடியாக கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்தது. நேற்றுமுன்தினம் கச்சா எண் ணெய் (பிரெண்ட்) விலை ஒரு பீப்பாய் ரூ.10 ஆயிரத்து 707-க்கு (116.32 அமெரிக்க டாலர்) விற்பனையானது.
போர் தொடக்கத்துக்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.6 ஆயிரத்து 717-க்கு (73 அமெரிக்க டாலர்கள்) விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஐரோப் பியா, ஜப்பான், சீனா மார்க்கெட்டுகளிலும் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இது நேரடியாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.