தி.மு.க. கூட்டணியில் இருந்து த.வா.க. வெளியேறுகிறது
1 min read
TMC exits alliance with DMK
20.3.2026
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இந்த தேர்தலில் 2 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஒரு தொகுதிதான் வழங்க முடியும் என்று தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அறிவித்தது.
இதன் காரணமாக வேல்முருகன் அதிருப்தி அடைந்தார். கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளது.