June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் 20 லிட்டர் குடிநீர் கேனின் விலை திடீர் உயர்வு

1 min read

Price of 20 liter drinking water can suddenly increases in Tamil Nadu

21.3.2026
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டம் காரணமாக எரிபொருள் சந்தைகளில் ஏற்பட்டு வரும் தாக்கத்தை தொடர்ந்து பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக நேற்று பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்தன.

இதனிடையே, சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமே என்கிற ஒருவித அச்ச உணர்விலே உள்ள மக்களுக்கு அடுத்து எந்த பொருட்களின் விலை உயருமோ என்ற பீதியும் நிலவுகிறது.இந்த நிலையில், 20 லிட்டர் குடிநீர் கேனின் விலையை ரூ.3 முதல் 5 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகையில், 20 ஆண்டுகளாக அனைத்து சூழலையும் சமாளித்து விலையை ஏற்றாமல் தாக்குப்பிடித்தோம். தற்போது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் குடிநீர் கேன் விலை ஏற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *