June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அமித்ஷாவுடன் ஆலோசனைக்குப் பின் டிடிவி தினகரன் பேட்டி

1 min read

TTV Dinakaran interview after consultation with Amit Shah

21.3.2026
டெல்லியில் அமித்ஷா உடனான சந்திப்பிற்கு பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

234 தொகுதிகளிலும் வெற்றி பெற எவ்வாறு செயல்பட வேண்டும் என அமித்ஷாவுடன் ஆலோசனை நடந்தது.

தொகுதிப்பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் பேசவில்லை. ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்தே பேசினேன்.

பீகாரில் வெற்றிபெற்றதை போல வரும் தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றிபெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.

ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பியூஷ் கோயலும் சென்னை வரமுடியாது என்பதால் டெல்லி வந்தோம்.

மத்திய அரசு இணக்கமாக செயல்படாததால் தமிழ்நாட்டிற்கு முறையாக நிதி வரவில்லை.

சசிகலாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வருவதற்கான எந்த ஒரு முயற்சியும், திட்டமும் இல்லை.

அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்கடிப்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *