100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்து 2-வது ஆண்டாக சாதனை- மத்திய அரசு தகவல்
1 min read
Record of 1 billion tonnes of coal production for the second year in a row – Central Government information
21.3.2026
நாட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது என மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனால், எரிசக்தி துறையில் சுய சார்புடன் இருப்பதில் நாடு வளர்ச்சி கண்டு வருவதுடன், முக்கிய ஆலைகளுக்கு தேவையான எரிபொருள் வினியோகம் தடைபடாமல் இருப்பதும் உறுதி செய்யப்படுவதில், அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது முக்கிய மைல்கல்லாகும்.
இதன் தொடர்ச்சியாக நிலக்கரி சார்ந்த அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, அபரிமித அளவிலான நிலக்கரி இருப்பை பராமரித்து மின் துறைக்கு ஆதரவான செயல்பாட்டை அரசு எடுத்து வருகிறது. இந்த தொடர்ச்சியான அதிக அளவிலான நிலக்கரி உற்பத்தி அளவானது, அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை திறம்பட எதிர்கொள்ள உதவுகிறது. இதனை மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.