June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

வாட்ஸ் அப்பில் இனி ஆடியோ கால்கள் தெளிவாக பேசலாம்

1 min read

You can now make clearer audio calls on WhatsApp

21.3.2026
வாட்ஸ் அப் செயலி பயனர்களை கவரும் வகையில் பல்வேறு புதுபுது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. அதிலும் இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுள்ளது.

வாட்ஸ் அப் செயலி வழியாக மெசேஜ் மட்டும் இன்றி, ஆடியோ, வீடியோ கால்களும் பேச முடியும். இந்த ஆடியோ, வீடியோ கால்கள் பேசும் போது இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக வாட்ஸ் அப் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.

அதாவது, பயனர்களுக்கு சிறந்த தகவல் தொடர்பு அனுபவத்தை வழங்கும் நோக்கில், வாட்ஸ்அப் செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் “noise cancellation” என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொது இடங்களிலும் எவ்வித பின்னணி இரைச்சலும் இன்றி மிகத் தெளிவாக பயனர்களால் பேச முடியும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *