மத்திய அரசின் அறிவிப்பால் உள்நாட்டு விமானக் டிக்கெட் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
1 min read
Domestic flight ticket prices likely to increase due to central government announcement
22.3.2026
உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை இன்று முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஏற்கனவே டிக்கெட் விலையை சில விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ள சூழலில் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தற்போது அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் இண்டிகோ விமான சேவை பாதிக்கபட்டதால் விமான டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்தன. ஆகவே விமான டிக்கெட் கட்டண உயர்வை கட்டுப்படுத்த விமானக் கட்டண உச்சவரம்பு முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. தற்போது உள்நாட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து கட்டண உச்சவரம்புகளைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.