June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி: பறக்கும் படையினர் சோதனயைில் ரூ 2.80 லட்சம் பறிமுதல்

1 min read

Paramakudi Flying Squad seizes Rs. 2.80 lakh in raid

22/3/2026
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர்,நிலையான கண்காணிப்பு குழுவினர் காவல் துறையினர், துணை ராணுவ வீரர்கள் துணையுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர்,நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரமக்குடி அருகேயுள்ள விளத்தூர் சந்திப்பு சாலையில் தேர்தல் பறக்கும் படை பி.3 என்.ரமேஷ்குமார் தலைமையில் 21 ம்தேதி காலை 8.15 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதுசமயம் அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ 56 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பரமக்குடி அருகே அரியனேந்தல் நான்கு வழிச்சாலை பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை ஏ.3 செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அதுசமயம் அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ 51 ஆயிரத்தி 70 ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் அரியனேந்தல் நான்கு வழிச்சாலை பகுதியில் பிற்பகல் 3.30 மணியளவில் பறக்கும் படை ஏ.1 ராமகிருஷ்ணபிரபு தலைமையில் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அதுசமயம் அப்பகுதியில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பரமக்குடி – நயினார்கோவில் செல்லும் சாலையில் அண்டக்குடி விலக்கு சாலையில் மாலை 4 .10 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதுசமயம் அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ 1.18 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

பரமக்குடி சட்டமன்ற(தனி) தொகுதியில் 4 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ 2 லட்சத்தி 80 ஆயிரத்து 70 ஐ பறக்கும் படை அதிகாரிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலக தலைமையிட துணை வட்டாட்சியர் சீதாலெட்சுமியிடம் ஒப்படைக்கப் பட்டு பின்பு கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டன.
One attachment
• Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *