June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி அருகே சோதனையில் 75 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.

1 min read

75 pounds of gold jewelry seized in raid near Paramakudi

22.3.2026
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதியில் கமுதி – பார்த்திபனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை ஏ.1 ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான குழுவினர் நேற்று இரவு 7 மணியளவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அதுசமயம் அப்பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த பொற்செல்வன் மனைவி சசிரேகா உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ 81 லட்சம் மதிப்புள்ள 75 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து பரமக்குடி வட்டாட்சியர் ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

பின்பு பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் பரமக்குடி சட்டமன்ற(தனி)தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,பரமக்குடி வருவாய் கோட்டாட்சியருமான ஞா.சரவண பெருமாள் அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டன..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *