சின்ன சிநேகிதனுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி
1 min read
Prime Minister Modi playing with his little friend
22.3.2026
பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு குழந்தையுடன் விளையாடும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், “லோக் கல்யாண் மார்க்கிற்கு வந்த ஒரு சின்ன சிநேகிதனுடன்” குறிப்பிட்டிருந்தார்.
பதிவிட்ட குறுகிய நேரத்திலேயே இந்தப் புகைப்படம் 17 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.
இந்நிலையில் அந்த சிறுவன் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரும் பாஜக தலைவருமான கிருஷ்ணகுமாரின் பேரன் நியோம் அஸ்வின் கிருஷ்ணா என்று தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகுமார் தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.