August 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் வாக்கு பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி

1 min read

Voting machine verification work in Tenkasi

22.3.2026
தென்காசி. மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிவுற்று பாதுகாப்பு வைப்பறையான வேளாண் விற்பனை கூட கிட்டங்கியில் பாதுகாத்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை, தலைமை தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 – இன் போது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (CUs + BUs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPAT) பெங்களூரு, BEL நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்று தென்காசி. மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ங்கள் பாதுகாப்பு வைப்பறையான வேளாண் விற்பனை கூட கிட்டங்கியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை சரிபார்ப்பில் தெரிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (CUs + BUs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPAT) சட்டமன்றத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்காக முதல் சமவாய்ப்புக்குட்படுத்தும் (First Randomization) அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 23.03.2026 (திங்கள்கிழமை) முற்பகல் 11.00 மணிக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் மேற்கொள்ளப்படுகிறது.

பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை திறக்கப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த சட்டமன்றப் பாதுகாப்பு அறைகளில் இருப்பில் வைக்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.

போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர், முதல் சமவாய்ப்புக்கு உட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (CUs BUs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) பட்டியல் போட்டியிடும் அனைத்துப் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *