June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் பள்ளியில் என்.எம்.எம்.எஸ்.தேர்வில் 29 பேர் தேர்ச்சி

1 min read

29 students pass NMMS exam at Avudaiyanur School

22.3.2026
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் என்.எம்.எம்.எஸ். தேர்வில் 29 மாணவிகள் தேர்ச்சி பெற்று வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்

2025-26ம் கல்வி ஆண்டிற்கான 8ம்வகுப்பு மாணவர்களுக் கான என்.எம்.எம்.எஸ்.
தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் 29 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

இதில் தென்காசி மாவட்டம் மாநில அளவில் 2ம் இடம் பெற்றுள்ளது. இத்தேர்வு எழுதிய ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 29 பேர் வெற்றி பெற்று, கீழப்பாவூர் வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என ரூ.48 ஆயிரம் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி அந்தோணி அ.குரூஸ், தலைமைஆசிரியர் அந்தோணி அருள்பிரதீப், உதவி தலைமை ஆசிரியர்கள் சகாயராணி, சாந்தி, என்.எம்.எம்.எஸ்.தேர்வு பயிற்சி ஆசிரியர்கள் ;ஜானி, ஜோஸ்பின் கோல்டா, சகாய ஜோதி, மேரிஜனா, பிரேம் திவ்யா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *