June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஏப்ரல் 16-ந் தேதியுடன் தேர்வுகள் முடிகிறது

1 min read

Exams in Tamil Nadu end on April 16th

23.3.2026
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுதி வருகிறார்கள். பிளஸ் 2 தேர்வு 26-ந் தேதியுடன் முடிகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நிறைவடைகிறது.

சுமார் 17 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வினை எழுதி முடிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுகிறது.

அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி களில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி 16-ந் தேதி நிறைவடைகிறது.

அதேபோல 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி தேர்வுகள் முடிகின்றன.

ஏப்ரல் 17-ந் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர் களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி விடுமுறை விடப்படுகிறது.

பள்ளிக்கூடங்கள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் கோடை விடுமுறை மாணவர்களுக்கு 48 நாட்கள் கிடைக்கிறது. ஏப்ரல் மாதத்தில் 14 நாட்களும், மே மாதம் முழுவதும், 31 நாட்கள் மற்றும் ஜூன் மாதம் 3 நாட்கள் என மொத்தம் 48 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பொதுவாக ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பது வழக்கம். ஆனால் அன்று வெள்ளிக்கிழமை வருவ தால் ஜூன் 4-ந் தேதி கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *