June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் கல்யாணி சிவகாமி நாதனுக்கு “சைவ சித்தாந்த இரத்தினம்” விருது

1 min read

Kadayam Kalyani Sivagami Nathan receives the “Saiva Siddhanta Ratnam” award

23.3.2026
கடையம் திருவள்ளுவர் கழகச் செயலாளர் கே.எஸ்.கல்யாணி சிவகாமி நாதன் அவர்களுக்கு சுத்தமல்லி திருவள்ளுவர் கழகம் “சைவ சித்தாந்த இரத்தினம்” விருதை வழங்கியது.

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் 9ஆம் ஆண்டு விழா கடந்த 19-ந் தேதி வியாழக்கிழமை நடந்தது. விழாவுக்கு அருண் சண்முகம் தலைமை தாங்கினார். ராமலிங்கம், சண்முகம், இராமச்சந்திரன், மோகன்தாஸ், கிருஷ்ணமூர்த்தி, தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
என்.சுதா, பாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் கடையம் திருவள்ளுவர் கழக செயலாளர் க,சோ.க.கல்யாணி சிவகாமிநாதன் அவர்களுக்கு “சைவ சித்தாந்த இரத்தினம்” விருது வழங்கப்பட்டது. அவர் விழாவுக்கு வர இயலாத காரணத்தால் அவர் சார்பாக அம்பை திருக்குறள் அறக்கட்டளைப் பொருளாளர் புன்னைவனம் நாறும்பூநாதன் பெற்றுக் கொண்டார்.

மேலும் கணபதி சுப்பிரமணியன்(குறள்நெறி காவலர்), பேராசிரியர் இராமச்சந்திரன் (தமிழ் காவலர்), மரிய சூசை( மனிதநேய பண்பாளர்), அண்ணாதாசன்(செம்மொழி காவலர்), செல்லப்பா ( சிவநெறி செல்வர்), கவிஞர் சுப்பையா(மக்கள் தொண்டர்), சண்முகம்(தகவல் களஞ்சியம்) ஆகியோரும் விருது பெற்றனர்.
மேலும் அம்பை தமிழ்பேரவை, நெல்லையில் உள்ள பொருறை இலக்கிய வட்டம் ஆகியவைக்கு இலக்கிய பீடம் விருது வழங்கப்பட்டது. விருதினை ம.சேதுராமலிங்கம் வழங்கினார்.
பத்தமடை கந்தசாமி, முருக இளங்கோ, முருகன், சங்கரநாராயணன், தச்சை மணி, உக்கிரன்கோட்டை மணி, தளவாய்நாதன், நவநீத கிருஷ்ணன், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், சிவகுருநாதன், பாப்பாகுடி முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் இராசிகா, அபிநயா, லட்சுமி அபிநயா ஆகியோரின் பரதநாட்டியம் நடந்தது.
முன்னதாக திருவள்ளுவர் கழக செயலாளர் பேச்சிநாதன் வரவேற்றார். முருகன் நன்றி கூறினார். தலைமை ஆசிரியர் கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *