August 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 80 ஆவது சுதந்திர தின விழா- ஆட்சித் தலைவர் தேசியக் கொடி ஏற்றினார்

1 min read

80th Independence Day celebration in Tenkasi – District Collector hoisted the national flag.

15.8.2026
தென்காசி மாவட்டம் சுதந்திர திருநாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று (15.08.2026) 80ஆவது சுதந்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.அசோக்குமார், முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு, சுதந்திர போராட்ட தியாகி கி.லெட்சுமிகாந்தன் பாரதிக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடையநல்லூர், மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கரிவலம்வந்தநல்லூர், செயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி குத்துக்கல்வலசை, அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பவர் வடகரை, ரெடிமர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆழ்வார்குறிச்சி, ஏ.எம்.சி அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம்வந்தநல்லூர் ஆகிய பள்ளிகளை சார்ந்த 720 மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தோட்டக்கலைத்துறை, தொழில்வணிகத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூபாய் 59,92,820/-மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

பின்னர் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை,வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலத்துறை, முதன்மை கல்வி அலுவலகம், மகளிர் திட்டம், நில அளவை பதிவேடு துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 465 அலுவலர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

அதேபோல் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 போட்டியாளர்களை கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி டாக்டர் கலை கதிரவன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, சார் ஆட்சியர் தென்காசி வைஷ்ணவி பால், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் சங்கரன்கோவில் அனிதா, தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதயகிருஷ்ணன், ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் தலைவர் இராமகிருஷ்ணன், காவல் துறை உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *