தென்காசியில் தென்மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
1 min read
Southern District Level Cricket Tournament in Tenkasi
23/3/2026
தென்காசியில் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் பரிசு வழங்கி பாராட்டினார்.
தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சார்பில் தென் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியை தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மனோஜ்குமார், தலைமை குற்றவியல் நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா, முதன்மை சார்பு நீதிபதி ஏ.பிஸ்மிதா, கூடுதல் சார்பு நீதிபதி முருகவேல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ.ராஜேஷ்குமார், நீதித்துறை நடுவர் எஸ்.முத்துலட்சுமி, செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிபதி குரு ஆகியோர் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.
இப்போட்டியில் தென்காசி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் அணி முதல் பரிசும், தூத்துக்குடி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் அணி இரண்டாம் பரிசும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் நீதிபதிகள். நீதிமன்ற ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
படம் விளக்கம்:-
தென்காசியில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டினார்.