June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி அருகே ரூ 1.12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்

1 min read

Foreign currency worth Rs 1.12 lakh seized near Paramakudi

2/3/2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற(தனி)தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர்,நிலையான கண்காணிப்பு குழுவினர் காவல் துறையினருடன் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பரமக்குடி அருகே பார்த்திபனூர் மருச்சுக்கட்டி தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடி பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் க.பழனிச்சாமி தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதுசமயம் அங்கு வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர்.சோதனையில் வெளிநாட்டு பணம் இந்திய மதிப்பில் ரூ ஒரு லட்சத்தி 12 ஆயிரத்து 200 ஐ (5 ஆயிரத்தி 100 ரியால்) பறிமுதல் செய்தனர்.

பரமக்குடி தேர்தல் நடத்தும் அலுவலரும்,வருவாய் கோட்டாட்சியருமான ஞா.சரவண பெருமாள் வட்டாட்சியர் அலுவலக தலைமையிட துணை வட்டாட்சியர்(பொறுப்பு) மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப் பட்டது.பின்பு பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *