June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

1 min read

Kumbabhishekam at Keelappavur Thiruvaleeswarar Temple

26.3.2026
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்;கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் (சிவன்) கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிசேக திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.
இதையடுத்து நேற்று (புதன்கிழமை) கும்பாபிசேகம் நடைபெற்றது. இதையொட்டி மங்கள இசை முழங்க காலை 9.30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் விமானம், மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
nகும்பாபிஷேகத்தை கல்லிடைக்குறிச்சி மஞ்சுநாத பட், அர்ச்சகர்கள் ரவிபட்டாச்சாரியார், ஆனந்தன், கிரி குமார், இராமசாமி ஆகியோர் நடத்தினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் அபிநிஷா, நீதிபதி கோகிலா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பொன்செல்வன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், செயல் அலுவலர் பொன்னி, கிளார்க் பொன்னையா, சுரேஷ், சீதாராமன், அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் கோவில் பணியாளர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *