June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் கடையம் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்

1 min read

AIADMK candidate K.R.P. Prabhakaran met prominent figures in the Kadayam area.

2.4.2026

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் கடையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி. பிரபாகரன் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடையம் வடக்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரமுகர்களையும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கடையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம், தெற்கு கடையம், சேர்வைக்காரன்பட்டி, முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பெரும்பத்து, தெற்கு மடத்தூர், வெங்கடாம்பட்டி, அய்ந்தான் கட்டளை, ஏபி நாடானூர், துப்பாக்குடி உள்ளிட்ட ஊராட்சி மன்ற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கடும் வெயிலிலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கடையத்தின் பல பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடையம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அருவேல் ராஜ், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி. முருகேசன், வி.கே. கணபதி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் தமிழ்மணியன், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் வடிவேல் முருகன், தெற்கு கடையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மகாலிங்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய பிரதிநிதிகள் மாடசாமி, முத்துராஜ், செல்வராஜ், கிளைச் செயலாளர் மாரியப்பன், அமமுக பொறுப்பாளர் முத்து, மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் முருகன், துணைத்தலைவர் ரவிக்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் வைகுண்டராஜன் உள்ளிட்ட தேசிய முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *