June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

1 min read

Election awareness on behalf of the Women’s Project

2.4.2026
தென்காசி குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் நேற்று (02.04.2026) நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி மாவட்டத்திற்கான தேர்தல் லோகோவை காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டத்திற்கான தேர்தல் லோகோவை காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. குத்துக்கல் வலசை பகுதியில் இன்று (02.04.26)தொடங்கி வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு ரதம் கடையநல்லூர் வழியாக வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளும், 03.04.2026 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சங்கரன் கோவில் தொகுதிக்குட்பட்ட நகராட்சிகள். பேரூராட்சிகள் பகுதிகளுக்கும், 04.04.2026 அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் மேலநீலிதநல்லூர் வழியாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும், 05.04.2026 அன்றுஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர். கடையம் வரையிலான ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பகுதிகளிலும், 06.04.2026 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டை வழியாக உள்ள ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தென்காசி மாவட்டத்திற்கான விழிப்புணர்வு ரதம் சென்று குத்துக்கல்வலசை பகுதியில் முடிவடையும். இது போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஏனென்றால், வாக்காளர்களாகிய நீங்கள் வருகின்ற ஏப்ரல் 23 அன்று தங்கள் வாக்கினை வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். அது மட்டுமல்லாமல், பொதுமக்களாகிய நீங்கள் 100 % வாக்குப்பதிவு குறித்து உங்களுடைய உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டினரிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *