June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓட்டப்பிடாரத்தில் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்

1 min read

Filing nomination papers in Ottapidaram on a bullock cart

2.4.2026
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இன்று அரசியல் சூழல் ஒரு வித்தியாசமான காட்சியை கண்டது. ஆம், வழக்கமாக கார்கள், ஜீப்புகள் நிரம்பியிருக்கும் தேர்தல் ஊர்வலங்களுக்கு மாறாக, இம்முறை மாட்டு வண்டி முன்னிலையில் மக்கள் கவனம் ஈர்த்தார் “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞரும், அந்த கட்சியின் பொதுச் செயலாளருமான அருணா தேவி ரமேஷ் பாண்டியன்..
ஓசனுத்து-புதியம்புத்தூர் ஜங்ஷன் முதல் தனது வேட்புமனு ஊர்வலத்தை தொடங்கிய அருணா தேவிமாட்டு வண்டியில் . மேளம், தாளம் முழங்க, கட்சியின் தலைவர் பொன் குமரன் தலைமையில் ஊரடமாக சென்றார்

இந்த ஊர்வலம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்ததும், அருணா தேவி தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி சுப்புலட்சுமியிடம் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருணா தேவி, மக்களின் குரல்வளைகள் எங்கு எல்லாம் ஒதுக்கப்படுகிறதோ அங்கு களத்தில் நின்று சம நீதியை பெற்று தந்திருக்கின்றேன்.

பல கட்சிகள் இருந்தாலும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை.. குறிப்பாக குடிநீர், பெண்கள் பாதுகாப்பு வசதி இல்லாமை, வேலைவாய்ப்பு, சாலை வசதிகள், காற்றாலையால் விவசாய நிலங்கள் அழிப்பு போன்றவைகள் உள்ளது..

ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றால் அரசு மருத்துவமனை கொண்டு வருவேன்.. பெண்களுக்கு என்று ஒட்டப்பிடாரத்தில் பள்ளிகளோ, கல்லூரிகளோ கிடையாது.. வெற்றி பெற்றால் பெண்களுக்கென்று தனியாக பள்ளி, கல்லூரிகள் அமைத்து தருவேன். பெண்கள் விழிப்புணர்வு மையங்களும் அமைத்து தருவேன். ஒட்டப்பிடாரம் தொகுதியை செழிப்பாக மாற்றி காட்டுவேன்.. திராவிட கட்சிகள் மதுவை ஒழிப்பேன் என்று கூறி வருகிறார்கள்.. ஆனால் மதுவை ஒழித்த பாடில்லை.

அதிமுக ஆட்சிக்காலத்தில் விதவைகள் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதாக கனிமொழி குற்றம் சாட்டினார்.. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு மதுக்கடைகளை கூட அகற்றவில்லை. ஆகவே போலி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி தொழில் அதிகம். ஆகவே, குட்டி சிங்கப்பூர் என்று அழைப்பார்கள். ஆனால் அந்தத் தொழில் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. அதனை மீட்டெடுப்பேன். அதுமட்டுமல்ல, விவசாயம், தொழில் வளர்ச்சி எதுவும் இல்லை. ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் விவசாயிகளுக்கு எதிரியான காற்றாலைகளை முதலில் அகற்ற பாடுபடுவேன்.

“திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வரவேண்டும் என்பது மக்களின் எண்ணம். இந்த முறை மக்கள் மாற்றத்தை தேர்வு செய்வார்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி உறுதியாக வெற்றி பெறும்,” என நம்பிக்கையுடன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *