June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவை வடக்கு தொகுதியில் வெற்றிபெறுவேன் – வானதி சீனிவாசன் உறுதி

1 min read

I will win in Coimbatore North constituency – Vanathi Srinivasan

3.4.2026

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு மிக்க நன்றி.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்ட போதும் கோவை தெற்கு தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதுபோல இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் வெல்வோம்.

திமுக என்ற தீய சக்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்து, அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் உதவியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம். தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *