ஆந்திர பிரதேச தலைநகராகிறது அமராவதி
1 min read
Amaravati becomes the capital of Andhra Pradesh
3.4.2026
ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் 2026 ஜூன் 2 முதல் அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக சட்டபூர்வமாக மாறும்.
2014 இல் ஆந்திர மாநிலம் ஆந்திர பிரதேசம், தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக விளங்கிய ஐதராபாத் தெலுங்கானா வசம் சென்றது.
எனவே ஆந்திர பிரதேசத்துக்கு அமராவதி தலைநகராக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் 2019 இல் அங்கு ஆட்சி அமைத்த ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு 1 தலைநகரம் என்பதற்கு பதிலாக 3 தலைநகரகங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தது.
ஆனால் 2024 தோ்தலில் வென்ற சந்திரபாபு நாயடு தலைமையிலான தெலுங்கு தேசம் அமராவதியை மீண்டும் தலைநகராக்கியது.
இதுதொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது ஒப்புதலும் கிடைத்துள்ளது. இதனை தெலுங்கு தேசம் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.