கடையநல்லூர் – ஆலங்குளம் தொகுதி வாக்குச்சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு
1 min read
Collector inspects polling stations in Kadayanallur – Alankulam constituency
4.4.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று (04.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி, பொட்டல்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முதலியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மத்தளம்பாறை விவேகானந்தா நடுநிலைப்பள்ளி மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிளாங்காடு அரசு தொடக்கப்பள்ளி, இடைகால் பாலமார்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் बोबा குறைபாடுகளை சரிசெய்து தேர்தல் பணிக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோரணமலை கடையம் சாலையில் பறக்கும்படை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேலாய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் பத்மா(கடையம்) அலிஸ்தாயம்மாள் (செங்கோட்டை) மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.