தேர்தலில் பெண் அலுவலர்களை அதே தொகுதியில் பணியமர்த்த கோரிக்கை
1 min read
Demand to appoint female election officials in the same constituency
6.4.2026
2026 சட்டமன்றத் தேர்தலில் பணிபுரியும் பெண் அலுவலர்களை அதே தொகுதியில் பணியமர்த்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தென்காசி மாவட்ட செயலாளர் க.மாரிமுத்து . மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.கேகமல் கிஷோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் 2026-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தென்காசி மாவட்டம்- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரிவதற்கு பணியமர்த்தப்பட்ட பெண் ஆசிரியர்களை அவர்களின் சொந்த சட்டமன்றத் தொகுதியிலேயே பணியமர்த்த வேண்டுதல் மற்றும் அவ்வாறு சொந்தத் தொகுதியிலேயே வாக்குச்சாவடி அலுவலர்களாக பெண்ணாசிரியர்களை பணியமர்த்தும் போது எளிதில் அணுக முடியாத அல்லது தொலை தூரங்களில் அமைந்துள்ள வாக்குப்பதிவு நிலையங்களில் இருந்து பெண்ணாசிரியர்களுக்கு தவிர்ப்பு வழங்கிட வேண்டும்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்கள் 2026-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெண் ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் தொகுதியிலேயே வாக்குச் சாவடி அலுவலர்களாக பணி அமர்த்துவதற்கும் அவ்வாறு அவர்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள எளிதில் அணுக முடியாத மற்றும் தொலைதூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெண்ணாசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி புரிவதிலிருந்து தவிர்ப்பு வழங்கக்கோரி, பார்வை மூன்றில் காணும் கடிதம் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் பார்வை நான்கில் காணும் கடிதத்தின் மூலம் பெண்ணாசிரியர்களை அவர்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதியிலேயே பணி அமர்த்துவதற்கும் அவ்வாறு பணி அமர்த்தும் போது அவர்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதியில் எளிதில் அணுக முடியாத மற்றும் தொலைதூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணி அமர்த்துவதில் இருந்து தவிர்ப்பு வழங்கிட வேண்டும் எனவும் பெண்ணாசிரியர்கள் தங்களுக்கு பணியமர்த்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எளிதாக சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எவ்வித குறைபாடும் இன்றி செய்து தர வேண்டும் எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. பார்வை மூன்றில் காணும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்கள் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு, பெண்ணாசிரியர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணி அமர்த்தும் போது பெண்ணாசிரியர்களை அவர்களின் சொந்த சட்டமன்றத் தொகுதியிலேயே பணி அமர்த்துவதோடு, அந்தத் தொகுதியில் எளிதில் அணுக முடியாத மற்றும் தொலைதூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெண்ணாசிரியர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணி அமர்த்துவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவதோடு, வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமடுத்தப்பட்டப் பெண்ணாசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு எளிதில் சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எவ்வித குறைபாடு இன்றி செய்து தர உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களால் கடிதம் வெளியிடப்பட்டுள்ளதால், தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 2026-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரிய பணியமர்த்தப்பட்ட பெண்ணாசிரியர்களுக்கு அவர்களது சொந்த சட்டமன்றத் தொகுதியிலேயே வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி அமர்த்துவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தொகுதியில் எளிதில் அணுக முடியாத மற்றும் தொலை தூரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணி அமர்த்துவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவதோடு பெண்ணாசிரியர்கள் தங்களுக்கு பணி அமர்த்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப உரிய முறையில் ஏற்பாடு செய்து தர வேண்டுமெனத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதென்காசி மாவட்டக்கிளையின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.