June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

1 min read

Virudhunagar: Instructions to provide paid leave to foreign workers

6.4.2026
விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தங்களது சொந்த மாநிலங்களில் வாக்குரிமை பெற்றுள்ள இத்தொழிலாளர்கள், தேர்தல் நடைபெறும் நாளான 9.4.2026 அன்று தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை அந்தந்தத் தொழிற்சாலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் அல்லது மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நாளன்று வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர் 94435 52902, 93447 45064 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *