குமுத்துக்கல்வலசையில் மிதிவண்டி பேரணி
1 min read
Bicycle rally in Kumuthugalwalasai
7.4.2026
தென்காசி மாவட்டம். பகுதியில் நேற்று குத்துக்கல்வலசை (07.04.2026) நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் தொடங்கிய மிதிவண்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி கணக்கப்பிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் வழியாக குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதிக்கு வந்தடைந்தது. மிதிவண்டி பேரணியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வலியுறுத்தப்பட்டது.
ஆகவே. பொதுமக்களாகிய நீங்கள் ஏப்ரல் 23 அன்று தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.அபிதாஹனீப், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ். உதவித்திட்ட அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.