புளியங்குடி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் பங்கேற்பு
1 min read
Collector participates in Puliangudi awareness program
7.4.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நேற்று (07.04.2026) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இளம் வாக்காளர்களிடையே 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரி மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய ரங்கோலியினை வரைந்து வாக்காளர் விழிப்புணர்வும். April -23 VOTE என்ற வடிவில் மாணவ, மாணவியர்கள் நின்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கம் இளம் வாக்காளராகிய நீங்கள் ஏப்ரல் 23 அன்று தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும். மேலும், நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திரு.அலேக்ஸ், இளம் வல்லுஞர் அகத்தியர். கல்லூரி முதல்வர் முனைவர். மணிகண்டன், உதவி காவல் ஆய்வாளர் ரத்தினபால் சாந்தி, குழந்தை நல குழுமம் தலைவர் விஜயராணி மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.