June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்பு

1 min read

Nominations of 4 Chief Ministerial candidates accepted in Tamil Nadu

7.4.2026
தமிழக சட்டசபை தேர்தலில் இம்முறை நான்குமுனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, எப்போதும் போல் தனித்து போட்டியிடும் தவெக, தமிழக அரசியலின் புதிய வரவான தவெக ஆகிய அணிகள் தற்போது தேர்தல் களத்தில் இருக்கின்றன. நான்கு முனை போட்டி என்பதால் தமிழக அரசியல் தட்பவெப்பநிலை முன்பை விட கணிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
திமுகவில் முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுகவில் இபிஎஸ் இடைப்பாடி தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நாதக சீமான் இம்முறை காரைக்குடியில் போட்டியிட, புதிய வரவு தவெக தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அனைத்து தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை அந்தந்த தொகுதிகளில் இருக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். 7000க்கும் அதிகமான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டாலும் விஐபி மற்றும் முதல்வர் வேட்பாளர்களாக ஸ்டாலின், இபிஎஸ், சீமான் மற்றும் நடிகர் விஜய் வேட்பு மனுக்கள் பற்றிய அறிவிப்புகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

இ,ந் நிலையில் இந்த 4 அணிகளின் முதல்வர் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் இன்று ஏற்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இம்முறை தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் 4 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்துவிட்டதால், அனைத்து தொகுதிகளிலும் தங்களின் அடுத்தக்கட்ட பிரசாரத்தில் அந்தந்த முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இறங்கி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *