காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
1 min read
Congress party’s election manifesto released
9.4.2026
தமிழ்நாடு பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் வெளியிட கிரிஷ் சோடங்கர் அறிக்கையை பெற்றுக்கொண்டார்.
இந்த தேர்தல் அறிக்கையில், 10 பிரிவுகளின் கீழ் 50 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
முதியோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்.
காலியான 3 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 2030-க்குள் நாய்களுக்கு 100% தடுப்பூசி & கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.