அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டி
1 min read
Only 5 candidates are contesting in the Ambasamudram constituency.
9/4/2026
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட 38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேட்பு மனு பரிசீலனையில் 6 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டது. புதிய தமிழகம், அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது சுயேட்சை வேட்பாளர்கள் சுப்பையா என்பவர் வாபஸ் பெற்றதால் தற்போது 5 பேர் மட்டுமே அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளனர். அவர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் சார்பில் கை சின்னத்தில் வி.பி.துரை, இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நத்தம் சிவசங்கரன் ஏர் சுமக்கும் உழவர், ஊதல் சின்னத்தில் தமிழக வெற்றி கழக ராஜகோபால், யானை சின்னத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இசை கண்ணன் ஆகிய 5 பேர் போட்டியிட உள்ளனர்..