June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கலெக்டருக்கு உலக சாதனையாளர் விருது

1 min read

World Achievement Award for Tenkasi Collector

9.4.2026
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் முன்புறம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நிகழ்ச்சியின் அங்கமாக இணையத்தால் இணைவோம் என்ற நிகழ்வின் மூலம் 112,885 வாக்காளர்கள் தேர்தல் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டதற்காக எலைட் உலக சாதனைக்கான சான்று மற்றும் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோருக்கு எலைட் நிறுவன ஆய்வுக்குழுவினர் ரக்சிதா ரங்கசாமி, ஏ.சங்கீதா, டாக்டர் சாந்தாராம் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது;-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் 08.04.2026 அன்று தொடங்கப்பட்ட இணையத்தால் இணைவோம் என்ற தேர்தல் உறுதிமொழி துவங்கப்பட்டு இன்று (09.04.2026) 24 மணி நேரத்திற்குள் 112855 வாக்காளர்கள் இணையத்தின் வாயிலாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டமைக்காக எலைட் நிறுவனத்தின் வாயிலாக உலக சாதனைக்கான சான்று மற்றும் கேடயம் கிடைத்துள்ளது.

இந்த விழிப்புணர்வு உறுதி மொழிக்கு உறுதுணையாக இருந்த தென்காசி மாவட்ட வாக்காளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் இந்நிகழ்வினை சிறப்பாக அமைத்துக் கொடுத்த Zoho நிறுவனத்தின் மென் பொறியாளர் ஜெயராஜ் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் 726. வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இல் 85 வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக இது போன்ற விழிப்புணர்வுகள் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். ஆகவே. வாக்காளர்களாகிய நீங்கள் ஏப்ரல் 23 அன்று தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ..கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.

முன்னதாக, பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறையாட்டம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு மூன்றாம் பாலினத்தவரின் கலைநிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து, வாக்காளர்களுக்கு 100 வாக்குப்பதிவை வலியுறுத்தி மின் விளக்குகளால் அமைக்கப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், தென்காசி மாவட்டத்திற்கான பொது பார்வையாளர்கள் நீரஜ்குமார், (கடையநல்லூர், தென்காசி) ஈஷா பிரியா, (ஆலங்குளம்) மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.அபிதாஹனீப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, உதவித்திட்ட அலுவலர்கள் சிவக்குமார், டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், சரவண பாண்டியன், இளம் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *