June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் பகுதியில் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரிப்பு

1 min read

Manoj Pandian collects votes in Kadayam area

9.4.2026
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் கடையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் கடையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் முதற்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஐந்தாம் கட்டளை, லட்சுமியூர், மணல்காட்டானூர், மாதாபட்டணம், கோவிலூத்து, நெல்லையப்பபுரம், வெங்கடாம்பட்டி, அருந்ததியர் நகர், குளத்துபுதூர், கருத்தலிங்கபுரம், சின்னக்குமார்பட்டி, ராஜா குடியிருப்பு, மைலப்புரம், புங்கம்பட்டி, முப்புலியூர், கட்டேறிபட்டி, சேர்வைக்காரன்பட்டி, செக்கடியூர், புறங்காட்டான் புலியூர், கீழக்கடையம், கல்யாணிபுரம், அங்கப்புரம், புலவனூர், மாதாபுரம், கானாவூர், ஆசிர்வாத நகர், மேட்டூர், சபரி நகர், வெய்க்காலிப்பட்டி, லெட்சுமிபட்டி, தீர்த்தாராபுரம், சொக்கநாதன்பட்டி, கட்டளையூர், சங்கரலிங்கபுரம், அழகம்மாள்புரம், முத்தம்மாள்புரம், பண்டாரக்குளம், வடமலைப்பட்டி, வள்ளியம்மாள்புரம், ராமச்சந்திரபுரம், மடத்துப்பட்டி, காவூர், கோதண்டராமபுரம், கேளாப்பிள்ளையூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக வேட்பாளர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரிப்பதற்காக சென்ற கிராமங்களில் மக்கள் ஆரத்தி எடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மக்களின் கோரிக்கைகளை வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றி தருவதாக திமுக வேட்பாளர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் வாக்குறுதியளித்தார்.

மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களையும் சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறியதோடு நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபாட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன், கடையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லம்மாள், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேர்மச்செல்வன், மாவட்ட பிரதிநிதி அயன்சாமி சசிகுமார், வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் மகேஷ், துணையமைப்பாளர் ஜெயக்குமார், கிளைச்செயலாளர் சமுத்திரபாண்டியன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *