August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மாநிலங்களவை உறுப்பினராக நிதிஷ்குமார் பதவியேற்பு

1 min read

Nitish Kumar takes oath as Rajya Sabha member

10.4.2026
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். இதனால், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய இருந்தார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என தொண்டர்கள் வலியுறுத்திய நிலையில், எம்.எல்.சி. பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார்.
இந்த நிலையில், பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார், இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது அறையில் நிதிஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய மந்திரிகள் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் முன்னிலையில் நிதிஷ் குமார் இந்தியில் பதவியேற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழாவின் போது, ​​ஜேடியு தலைவரும் கட்சியின் செயல் தலைவருமான சஞ்சய் குமார் ஜா, காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *