June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

நயினார் நாகேந்திரன், வானதியை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

1 min read

Nainar Nagendran campaigns in Annamalai in support of Vanathi

11.4.2026
நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூர் தொகுதியிலும் வானதிசீனிவாசனை ஆதரித்து கோவை வடக்கு தொகுதியிலும் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தை பிடித்திருக்கும் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து, மக்கள் நலன் காக்கும் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு ஒன்றுபட்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

தென்தமிழகத்தின் வளர்ச்சி மீது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிக்கவனம் உண்டு. அப்படி தமிழக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் தென்மாவட்டங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு என்ன வளர்ச்சி திட்டங்களை கொடுத்தது? தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் திமுக ஆட்சி வேண்டாம். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை கொண்டுவர தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்கள் நல ஆட்சியால் மட்டுமே முடியும்.

தமிழகத்தில் அடிமை கட்சி என்றால் அது திமுக மட்டும்தான். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை குறைத்துவிட்டு ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கொடுக்க காரணம் என்ன? யாருக்கு யார் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். வளர்ச்சிக்கு எதிரான, மக்கள் நலனுக்கு எதிரான திமுக கூட்டணியை முற்றிலும் புறக்கணிக்கவேண்டிய நேரம் இது. வருகின்ற 23-ம்தேதி நடைபெறும் தேர்தலில், தமிழக மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் திமுக கூட்டணிக்கு முடிவு கட்டப்போவது உறுதி.
சாத்தூர் பகுதியில் வறட்சி நிலவுவதற்கு திமுகவின் கையாலாகாத திட்டமிடலே காரணம். செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பலமுறை கேரளா சென்றபோதும் அதுபற்றி பேசவில்லை. விவசாயத்தின் மீது அக்கறையில்லாத ஆட்சி இனியும் தொடர கூடாது.
அதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை நமது தாய்மார்களும், பொதுமக்களும் மகத்தான ஆதரவு வழங்கி வரலாற்று வெற்றி பெற வைப்பார்கள் என்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! தமிழகம் மீண்டும் தலைநிமிரட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கண்ணப்ப நகரில் பாஜ அண்ணாமலை பேசியதாவது: திமுக ஆட்சியை துாக்கி எறிய மக்கள் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணியின் அலை வீசுகிறது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 கற்பழிப்பு சம்பவங்கள், 18 ஆயிரம் ‘போக்சோ’ வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான ஆட்சி நடந்துகொண்டிருக்க, இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக ஸ்டாலின் கூறிக்கொண்டிருந்தார். அந்த இரும்புக்கரம் துருப்பிடித்து நிற்கிறது. செந்தில் பாலாஜி என்ற ‘எலி’ கோவை பொறியில் மாட்டியுள்ளது.நாட்டில் 1977க்கு பின், ஒரு கட்சி தனித்தன்மையுடன் ஆறு முறைக்கு மேல் ஆட்சி அமைத்துள்ளது என்றால், அது அதிமுகதான். இது, அதிமுகவின் கோட்டை. தேஜ கூட்டணி பத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

திமுகவின் ஊழல் பட்டியல் காங்., கட்சியிடம் உள்ளது. அதனால் காங்., பற்றி திமுகவினர் பேச மாட்டார்கள். பாஜ – அதிமுக ஆகிய இரண்டுமே எளிமையான கட்சி. சாமானிய மனிதர்களும் தலைவர் பொறுப்புக்கு வரலாம் என்பது, தேஜ கூட்டணியின் அடிப்படை தத்துவம். கருணாநிதி முதல்வரானவுடன், நாடு முழுவதும் சுரண்டி அவரது குடும்பத்துக்கு நான்காவது தலைமுறைக்கும் தேவையான சொத்துக்களை சேர்ந்துள்ளார். அண்ணா என்கிற வார்த்தையை திமுக கட்சியினர் பயன்படுத்தவே கூடாது.

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, செந்தில் பாலாஜியை தமிழகத்தின் ஊழல்பேர்வழி என்றார். இன்று, அருமை சகோதரர் என்கிறார்; காரணம் பெட்டி மாறியுள்ளது. திமுக வேட்பாளர்கள் ‘டெபாசிட்’கூட இங்கு வாங்கக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *