பாவூர்சத்திரத்தில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்
1 min read
Nayinar Nagendran campaigning at Pavurchatra
11.4.2026
தென்காசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து பாவூர்சத்திரத்தில் திறந்த ஜீப்பில் நின்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
அப்போது அவர் பேசியதாவது:-
தென்காசியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் கொண்டு வந் துள்ளார். மக்களின் வரிப்ப ணத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும் எடப்பாடியின் அதிமுகதேர்தல் அறிக்கையில் பல நல்ல திட் டங்களை அறிவித்துள்ளார். வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல வசதிகள் என 200க்கும் மேற்பட்ட திருக்குறுதிகளை கொடுத்துள்ளார்.
அதிமுக கொடுத்துள்ள தேர்தல் அறிக்கைகளை நம்பி வருகிற சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்க ளித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பாவூர்சத்திரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.எம்.
ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் அருள்செல்வன், அதி முகதொகுதி பொறுப்பாள தலைவர் முத்துக்குமார். அமல்ராஜ் அருணகிரி, பாமக மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, தமாகா தெற்கு மாவட்ட தலைவர் அய்யாத்துரை, அதிமுக தென்காசி நகர செயலா ளர் சுடலை, மாவட்ட அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முககசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் வீர பாண்டியன், பொருளாளர் சாமிநாதன், பொருளாளர் இசக்கி பாண்டியன், வில்சன்,
மாவட்ட எம்ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர்வழக்கறிஞர் அ.கார்த்திக்குமார்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து ஒன்றிய செயலாளர் சங்கர பாண்டியன். மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் வழக்கறி ஞர் சிவக்குமார் ஜனதா, டாக்டர் கிருஷ்ணசாமி சுப்பாராஜ், நெல்லை முகிலன், அகமதுஷா முருகன்ராஜ், முத்துக்குமாரசாமி, ஸ்டீல் மாரியப்பன், சாமி, பால முருகன் துப்பாக்கி பாண் டியன், வெள்ளப்பாண்டி, பூக்கடை சரவணன், கூட் டுறவு சங்கர். சிந்தாமணி காமராஜ், பட்டு பூச்சி பீர் முகமது, பாஜக நகர தலை வர் சங்கரசுப்பிரமணியன், செந்தார் பாண்டியன். மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.